states

img

லடாக் ஆற்றில் கவிழ்ந்த ராணுவ டேங்க் வாகனம்: 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

லடாக் பகுதியில் உள்ள ஆற்றில் தீடிரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி ராணுவ வாகனம் மூழ்கியதால், 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், ஆற்றை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கொள்கிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், லடாக்கில் ராணுவத்தின் டி-72 டேங்க், ஆற்றைக் கடக்கும்போது இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். துக்கமான இந்த நேரத்தில் நமது வீரம் மிக்க ராணுவ வீரர்களின் முன்மாதிரியான சேவைக்கு தேசம் ஒன்று சேர்ந்து வணக்கம் செலுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், லடாக்கில் ராணுவப் பயிற்சி டேங்க் ஆற்றைக் கடக்க முயன்றபோது ஆற்று வெள்ளத்தில் மூழ்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.வீரமரணம் அடைந்துள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர் மிகு தருணத்தில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம்.அவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் சேவைகளை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகாலை 1 மணியளவில் டி-72 பேங்க் வாகனத்தில் ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

;